கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளார்.
நபர் ஒருவர் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழு அந்த நபரை கைது செய்ய குறித்த பகுதிக்கு சென்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.