பொலிஸாரின் தாக்குதலால் மரணமடைந்த “அலெக்ஸ்” இன் உடலோடு மக்கள் நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது , சடலத்துடன் ஊரவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொலிசாரின் சித்திரவதையால் அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என கூறப்படும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படாதது பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதுடன் அவர்கள் மீதான சந்தேகமும் வலுத்து வருகின்றன என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *