2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுப் பணவனுப்பல்களின் மொத்த மதிப்பு 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10.1% அதிகரிப்பாகும்.