புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த மயிலங்காடு வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் நேற்று அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்தவேளையே குறித்த நபர் வீட்டினுள் சடலமாக இருப்பதை கண்டுள்ளனர்.

பின்னர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜேயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *