ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
ரமேஷ் பத்திரன இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டிலிருந்து பெருமளவான வைத்தியர்கள் வெளியேறுவதுடன் சுகாதாரத் துறையும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இக்கட்டான தருணத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடமிருந்து அமைச்சு பதவியை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.