நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை வடக்கிற்கு எதிராகவும் நிலைநிறுத்தும் அரசியலால் நீண்டகாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தேர்தல் பிரிவினைவாத அரசியல் பிளவுபடுத்தும் அரசியல் இனி எடுபடாது என்பதை இந்த தேர்தல் காண்பித்துள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும். மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும். “வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளும் பெரியது.” என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.