பிரித்தானியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் டேனியல் ஷெரியும் கலந்து கொண்டிருந்தார்.
இச் சந்திப்பின் போது, தற்போதைய அரசாங்கம் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவது குறித்தும் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தப்பட்டதோடு, நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர் இடையே கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.