பிரித்தானியாவின் கார்டிஃப்(Cardiff) பகுதியில் உள்ள வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதிகளின் சடலங்களை மீட்டுள்ள சவுத் வேல்ஸ் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, வளர்ப்பு நாய் ஒன்றும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பிரேத பரிசோதனை முடிவுக்காக பொலிஸார் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுளன.
இதேவேளை சடலங்களாக மீட்கப்பட்டோர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இருவரும் சுமார் 72 மற்றும் 74 வயதுடையவர்களாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.