பிரிட்டனில் உள்ள லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் இருந்த சுமார் 1200 க்கும் அதிகமான வாகனங்கள் இத் தீ விபத்தினால் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகுறது.
சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.