பிரான்ஸ் தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோர் தடுத்து வைப்பு!

கடந்த வருடம் நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SOS Solidarity  மற்றும்  France Terre d’Asile  உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கான உரிமை குழுக்களின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும் ஐந்து வீதம் மாத்திரமே பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 120 இற்கும் மேற்பட்டவர்கள் தாம் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்தும், பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களை இளைஞர், யுவதியாகவே கருதியதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அல்ஜீரியா, துனிசியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *