பிரான்ஸ் இராணுவத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

பிரான்ஸ் ராணுவம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நைஜர் தலைநகர் நியாமியில் உள்ள பிரான்ஸ் ராணுவ தளத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பிரான்ஸ் ராணுவம் நைஜரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி மேக்ரான் நிர்வாகம் இதுவரை ஆதரிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின்னர், அந்த நாடுகளில் இருந்து பிரான்ஸ் ராணுவம் வெளியேற்றப்பட்டது. தற்போது ஜூலை 26ல் நைஜர் நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், பிரான்ஸ் ராணுவத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நைஜரில் பிரெஞ்சு எதிர்ப்பு உணர்வு அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, கடந்த வாரம் பிரான்ஸ் தூதுவர் Sylvain Itte-வை நாட்டை விட்டு வெளியேற ராணுவ ஆட்சியாளர்கள் உத்தரவிட்டதை பிரான்ஸ் புறந்தள்ளியது.

இதனையடுத்து காவல்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுக்கும் என ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்த ஒரு ஆட்டின் கழுத்தை அறுத்து, பிரெஞ்சுக் கொடிகளால் மூடப்பட்ட சவப்பெட்டிகளை எடுத்துச் சென்றனர்.

பலர் பிரான்ஸ் ராணுவத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இதுவரை நடந்த மிகப் பெரிய கூட்டம் அது எனவும் இராணுவ ஆட்சிக்கு ஆதரவு பெருகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum உடன் பிரான்ஸ் நல்லுறவைக் கொண்டிருந்தது மற்றும் நைஜரில் சுமார் 1,500 பிரஞ்சு துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவிக்கையில், ஒவ்வொரு நாளும் பாஸூமுடன் பேசுவதாகவும், நாங்கள் எடுக்கும் முடிவுகள், அவை எதுவாக இருந்தாலும், பாஸூமுடனான பரிமாற்றங்களின் அடிப்படையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *