15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் டைனோசர் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பாரி(Barry) என்று அழைக்கப்படும் டைனோசரின் எலும்புக்கூடு கேம்டோசாரஸ் என்ற இனத்தை சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு என்று பின்னர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த டைனோசர் எலும்பு கூட்டின் நீளம் சுமார் 16.4 அடியும் அதன் உயரமும் 6.9 அடியும் கொண்டது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தாவர உண்ணி டைனோசர் எலும்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த எலும்புக்கூடு சுமார் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 கோடி வரை ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.