பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை எனவும் கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும், அழகப்பனுக்கே அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள் என நடிகை கௌதமி குற்றம்சாட்டியுள்ளார்.
அழகப்பனுக்கு பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.