தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்கவுள்ளது.
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மொத்தமாக மாவட்டங்களில் இருந்து 196 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 19 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதன்படி, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் இம்முறை ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை 6 ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் கடந்த முறை 19 ஆசனங்கள் இருந்த நிலையில் இம்முறை 18 ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கடந்த முறை 18 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 19 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தல் கடந்த முறை 10 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 11 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.