எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று (21) கருத்து வெளியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைமை தொடர்பில் அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பிய போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு அமைதியற்று செயற்பட்டனர்.
தீர்ப்பிற்கமைய குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை எவ்வாறு அறவிடப்போகிறீர்கள் என அவர் இங்கு கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கது.