ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு கூறியுள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்க முடியுமென பாதுகாப்பு அமைச்சினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் அறவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.