024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் 21ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.
ஆனால், சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும், முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.