யாழ். பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றைத் துப்பரவு செய்யும்போது அதிகளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
போர் காரணமாக 35 வருடங்களாகப் பாவனையற்றிருந்த காணியில் உள்ள கிணற்றில் இருந்தே மேற்படி குண்டுகள் நேற்றய தினம் (26) மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.