பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை கூடவுள்ளது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவின் உத்தரவிற்கமைய திருத்தங்களுக்கு உட்பட்டு குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இதனிடையே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக தமது அதிருப்திகளை வௌியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.