பதில்களை அறிவதற்கான உரிமை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்டு – ஜுலி சங்

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களுக்குரிய பதில்களை அறிந்துகொள்வதற்கும், பொறுப்புக்கூறலைப் பெறுவதற்குமான உரித்தைக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தாம் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உண்மையையும் நீதியையும் கோரும் சமூகங்களுடன் உடன்நிற்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதுமாத்திரமன்றி தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமல் இருப்பதன் சுமை மிக அழுத்தமானது எனக் கவலை வெளியிட்டிருக்கும் அவர், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களுக்குரிய பதில்களை அறிந்துகொள்வதற்கும், பொறுப்புக்கூறலைப் பெறுவதற்குமான உரித்தைக் கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *