பண்டிகை காலத்தை முன்னிட்டுஇ பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி நாளை முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 பேருந்துகள் அதிகாமாக இயக்கப்பட உள்ளதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.