பண்டத்தரிப்பு பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு!

யாழ்/ பண்டத்தரிப்பு பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின் முன்புறத்தில் கிடப்பதை அவதானித்து பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை பார்வையிட்டதோடு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *