இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (25) நண்பகல் 12.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.