யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் செப்ரெம்பர் முதலாம் (1) திகதி முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் வெள்ளிக்கிழமை (01) முதல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைத்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை யாழ் மாவட்டத்தில் இருந்து மையப்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.
அவை, பகல் வேளைகளிலும் இரவில் ஆகக் கூடுதலாக 10 மணிவரையிலான காலப்பகுதிக்கான அட்டவணை நிரலின் அடிப்படையில் தமது சேவையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது சேவையை 24 மணிநேரமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேரக் கணிப்பாளர்கள் மற்றும் ஆளணிகள் குறித்த சேவைக்காக நியமிக்கப்பட்டு , இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தூர இடங்களில் இருந்து வரும் பயணிகள் இதுவரை காலமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அதற்கான தீர்வு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதுடன் தமது பயணங்களை இலகுவாகவும் தடைகளின்றியும் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.