கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.