ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு 23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள் கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என ஐக்கியநாடுகள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்ற போதிலும்,1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஒடுக்குமுறைக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்.
பொறுப்புகூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பை மனித உரிமை ஆணையாளரின் விஜயம் வழங்குகின்றது.
கடந்தமாதம் பல சிறுவர்கள் உடல்கள்கள் உட்பட 19 பேரின் மனித எச்சங்கள் காணப்பட்ட மனித புதைகுழி கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் யாழ் நகரத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்,பல தசாப்தங்களாக தண்டனை விடுபாட்டுரிமை,அவற்றை விசாரணை செய்ய தவறியமை போன்றவை காணப்பட்டதால் ,மனித புதைகுழியை தோண்டும்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேண்டுகோள்களுடன் ஒக்லாந்து நிறுவகம் இணைந்துகொள்கின்றது.
நிலைமையை முழுமையாக மதிப்பிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்குகிழக்கின் அனைத்து பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொள்ளவேண்டும்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் காரணமாக 169 796 தமிழர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கொல்லப்பட்டதாக கருதப்படுவதாகவும் முள்ளிவாய்க்காலிற்கு மனித உரிமை ஆணையாளர் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விஜயங்கள் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள்,நில அபகரிப்பு,கண்காணிப்பு, அச்சுறுத்தல் தமிழர்களின் பாரம்பரியம் திட்டமிடப்ட்டு சிதைக்கப்படுதல்,தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் புத்தவிகாரைகள் உருவாக்கப்படுதல் தடையின்றி தொடர்தல் போன்றவற்றைமதிப்பிடுவதற்கும் பார்ப்பதற்கும் உதவியாக அமையும்.
யாழ்ப்பாணம் தையிட்டியில் படையினரின் சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.தமிழர்களின் வரலாற்றை கலாச்சாரத்தை அழிப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் திட்டமிட்ட தந்திரோபாயம் இதுவாகும்.
அநீதிகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடக்குகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டங்களை மீறியமைக்கா பொலிஸ் விசாரணை அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.