ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ருவன்வெலவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.
கடந்த காலங்களில் பல முன்னாள் தலைவர்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நீக்கம் குறித்த வாக்குறுதியை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை, நான் நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட அமைப்புமுறையொன்றை அறிமுகப்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.