பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைவு கூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது.
தமிழர்களிற்கு எதிரான பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண்டிக்க வேண்டும்,குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைவுகூரும் இந்த தருணத்தில் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.