ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று (07) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.