நாகபட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இன்றைய கப்பல் சேவை நிறுத்தம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்று (10) பயணிக்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பயணிகள் சேவை இன்று முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.

எனினும் தவிர்க்க முடியாத தொழிநுட்ப காரணங்களால் குறித்த கப்பல் இன்று வராது எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சேவைக்கான டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் 7500 முதல் 8000 வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அந்தத் தொகையை செலுத்தி பயணச் சீட்டைப் பெறுபவர் 40 கிலோ பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என  இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதன் ஒரு வழி பயணத்திற்கு 3 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை இடையே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் இதற்கான ஒத்திகையும் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் நபர் அல்லது இந்தியாவிலிருந்து இந்த நாட்டிற்கு வர விரும்பும் நபர் தொடர்புடைய பொதுவான சட்ட ஆவணங்களின் (விசா, பாஸ்போர்ட்) தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு இந்த பயணத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *