இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.
ஒக்ரேன் 92 பெற்றோல் 21 ரூபாவால் குறைக்கப்பட்டு 311 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு 283 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 33 ரூபாவால் குறைக்கப்பட்டு 319 ரூபாவாகவும், மண்ணெண்ணை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு 183 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ரேன் 95 பெற்றோல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.