ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று (20) காலை டுபாய்க்கு பயணமாகியுள்ளார்.
குறித்த தகவலை விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று அதிகாலை 03.05 அளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.