அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுள்ள தேர்தல் சின்னங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களால், வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கும், வாக்களிப்பு செயல்பாட்டை இலகுபடுத்துவதற்கும் இவ்வாறான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத சின்னங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.