உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேர்தல் பிற்போடப்பட்டமையினால் வேட்புமனுக்களை சமர்ப்பித்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் குழு கூட்டத்தின்போதே தீர்மானம் எடுக்கப்பட்டது.