தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பெண்கள் குழு இவ்வாறு கூட்டாக அறிவித்தது.