தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான மாவீரர் நாள் இன்று.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட தமிழர்கள் செறிந்து வாழும் உலகைன் பல நாடுகளில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
1989 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு அன்று முதல் இன்று வரை இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களால் மிக எழுச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.