யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்றும் (13) காலை முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புற்றுநோய் பிரிவின் மீது முன் வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றுதல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம்”, “புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம்” என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.