தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2023 உலகக் கிண்ண ஒருநாள் போட்டி நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.

இன்னிலையில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 382 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதில் தென்னாபிரிக்கா அணி சார்பில் Quinton de Kock 174 ஓட்டங்களையும், Aiden Markram 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு Heinrich Klaasen 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இன்னிலையில் 383 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது 

அதன் அணிசார்பாக Mahmudullah பங்களாதேஷ் அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களான 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

மேலும் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *