தூதரகங்களில் பணியாற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மீதான நடவடிக்கை விரைவில்:

வெளிநாடுகளிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்கள், தூதரகங்களில் எமது நாட்டின் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான முழுமையான அறிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தயாரிக்கப்படுகின்றன. குறித்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏனைய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் மீள அழைக்கப்பட மாட்டார்கள். தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இடம்பெறுகிறது. ஐ.நா.வுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் பீரிஸ் அங்கு உரையாற்றவுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களை மீள அழைப்பது பொறுத்தமானதாக இருக்காது.

எவ்வாறிருப்பினும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவற்றை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *