இன்று (23) சற்று முன்னர் துருக்கி தலை நகர் அங்காராவில் (Ankara) தீவிரவாதிகள் நடாத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் இயந்திர துப்பாகிகளோடு தாக்குதல் மேற்கொண்டமை மக்கள் அவதானித்துள்ளதோடு அதனை காணொளி பதிவு செய்து சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
இதே வேளை அங்கு ஒரு குண்டு வெடிப்பும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் முழுமையான சேத விபரம் தொடர்பிலோ, தீவிரவாதிகள் எத்தனைபேர் என்பது தொடர்பிலோ துருக்கி பொலிஸாரால் இதுவரை வெளியிடப்படவில்லை.
அத்தோடு தீவிரவாதிகள் இன்னமும் கொல்லப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என தெரிவிக்கப்படுகிறது. திடீரென நடாத்தப்பட்ட இத்தாக்குதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.