துருக்கியில் குண்டு வெடிப்பு!

துருக்கியின் உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு “பயங்கரவாத தாக்குதல்” என்றும், இரண்டு தாக்குதல்காரர்கள் வணிக வாகனத்தில் வந்து தாக்குதலை மேற்கொண்டதாகவும், கட்டிடத்தின் முன் ஒரு தாக்குதல்தாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டதாகவும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை எனவும், இந்த தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *