மின்னேரியா கிரித்தல பகுதியில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்டத்தின்போது கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த 17 வயதுடைய யுவதி வைத்தியசாலையில் கிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரித்தலை பகுதியைச் சேர்ந்த கோசலா சாமோத்ய பண்டார என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.