உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மையை (MonkeyPox/MPox) உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவல்களின் படி, இந்த ஆண்டு இதுவரை ஆப்பிரிக்க கண்டத்தில் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி 517 பேர் இறந்துள்ளதாகவும், 17,000 க்கும் மேற்பட்டவர்கள் குறித்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குரங்கம்மை என்பது பெரியம்மை போன்ற ஒரு வைரஸ் நோயாகும். வழக்கமாக, இந்த வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்று பல பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானதாக மாறக்கூடும்.
இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும், உடலில் சீழ் நிறைந்த புண்களையும் ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தில் உறுப்பினராக உள்ளது, இது பெரியம்மைக்கும் காரணமாகும்.
குரங்கம்மையின் வெவ்வேறு வெடிப்புகளில் இறப்பு விகிதங்கள் வித்தியாசமாக காணப்படுவதால் உலக சுகாதார அமைப்பும் கவலை கொண்டுள்ளது.