திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமான பதிவு!

தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாக ஏ.ஆர். ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார்.மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் எக்ஸ் தள பக்கத்தில் தனது விளக்கத்தை பதிவு செய்தார்.

அதில், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார். கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்காகத் தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்தார்.

மேலும், திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *