திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள்!

தமிழக மாவட்டம் திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் பயிற்சி எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி முக்கொம்பு அணைக்கு 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார்.

அங்கு இருந்த பயிற்சி எஸ்.ஐ.சசிக்குமார், காவலர்களான பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகிய 4 பேர் சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி ஜீயபுரம் காவல் நிலையில் அத்துமீறிய பொலிஸார் மீது புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *