திருகோணமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு:

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதனை சம்பூர்- ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் தூவி விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 350 மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னைமரக் கன்றுகள் வழங்கப்பட்டிருந்தன. அத்தோடு அவர்களது குடும்பங்களுக்கான மதியபோசனமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *