யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார்.
இவருடன் விஜய் ரி.வி யின் பிரியங்காவும் வந்துள்ளதோடு, அவரும் தியாகதீபம் திலீபனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாலை வேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், முற்றவெளி மைதானத்தில் மாலை 4:00 மணிக்கு சந்தோஷ் நாராயணன் பங்கேற்கும் ‘யாழ் கானம்’ பிரம்மாண்ட இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.