இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே “முழுமையான போர் நிறுத்தம்” ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட பதிவில், “தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை. இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை,” என்று குறிப்பிட்டார்.