பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்னும் இருவாரங்களில் நாட்டுக்கு வருகைத் தருவார். அதன் பின்னர் அரசியல் கூட்டணி பற்றி கலந்துரையாடுவோம். யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதை கட்சியின் நிறைவேற்று சபையே தீர்மானிக்கும் என்றார்.