தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை (14) பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பெருமளவு பொது மக்கள் கலந்துகொண்டார்கள்.